தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிதியமைச்சரின் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு ஒன்றுமில்லை - ப. சிதம்பரம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

p chidambaram tweet
p chidambaram tweet

By

Published : May 16, 2020, 8:55 PM IST

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம்பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ.3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம். வாழ்க இந்திய ஜனநாயகம்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details