தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 26, 2022, 8:17 AM IST

ETV Bharat / city

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' பஜ்ஜி போடுவதை வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம் - சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அதில் பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம் எனவும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சென்னை:அனைத்து இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில் 'காங்கிரஸ் எக்னாமிக் மாடல்' எனும் கருத்தரங்கம் சென்னையில்நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழா மேடையில் பேசிய ப.சிதம்பரம், "கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. 1991-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பேச போகிறேன்.

நேரம் வந்துவிட்டது: 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை 4 முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மாற்றமடைந்துள்ளது. 7.5 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடு என GDP அதிகரித்தது. 230 மில்லியன் மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நம் நாட்டில் 50 விழுக்காடு மக்கள் தொகையினர் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள். நமது பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

காங்., ஆட்சிக்கு வந்தால்...: இந்த 31 ஆண்டுகளில் பொருளாதார நடவடிக்கைகள் பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது. பசியால் வாடுபவர்கள் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101ஆவது இடத்தில் உள்ளது. 8.72 லட்சம் இடங்களுக்கு மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளன.

10 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம்.

கேரளாவும் பீகாரும் ஒன்றல்ல: கல்வி மாநிலப் பட்டியலுக்கு செல்லவேண்டும். கல்விக்காக மாணவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பீகாரின் மருத்துவ கட்டமைப்பையும், கேரளாவின் கட்டப்மைப்பையும் ஒப்பிட முடியாது. கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அப்போதுதான் உள்ளடங்கிய வளர்ச்சியைப் பெற முடியும். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி கடன் வழங்கப்படுவதாக நிதி அமைச்சரால் கூறப்பட்டு, 3 லட்சம் கோடிதான் கடன் கொடுக்கப்பட்டது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை' என நினைக்கிறேன். கல்வி கடனுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 10 ரூபாய் மட்டும் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் மாணவர்கள் எவ்வாறு கல்வி பெற முடியும்.

ஆபத்தான அக்னிபாத்:சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். திறன் மேம்படுத்துவதற்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்துகிறார்களா? ராணுவம் என்பது திறன் மேம்பாட்டு திட்டம் கிடையாது. அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் முடி திருத்துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பார்களாக மாற போகிறார்கள்" என கூறினார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் விசா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழி என்ன தெரியுமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details