தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவமனையில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஓபிஎஸ்! - பசுமை வழி சாலை

கரோனா தொற்று ஏற்பட்டு ஒன்பது நாள் மருத்துவமனை சிகிச்சையிலிருந்து குணம் அடைந்த ஓபிஎஸ் ஓய்வு எடுப்பதற்காக தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஓபிஎஸ்
மருத்துவமனையில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஓபிஎஸ்

By

Published : Jul 24, 2022, 4:59 PM IST

கடந்த 15ஆம் தேதி கரோனா அறிகுறி இருந்த நிலையில் சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓபிஎஸ் பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 9 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(ஜூலை.23) கரோனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்ததால் இன்று(ஜூலை.24) காலை 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இதனையடுத்து பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு வருவார் என எதிர்பார்த்து, அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்பதற்கு காத்திருந்தனர். ஆனால் ஓபிஎஸ் மருத்துவமனையில் இருந்து நேராக அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுப்பதற்காக சென்றார்.

அறையில் ஓய்வெடுப்பதற்கு வசதியாக ஓபிஎஸ் பயன்படுத்தும் சில பொருட்கள் ஒரு பெட்டியிலும் அவருக்கென்று பயன்படுத்தும் பிரத்யேக தலையணை உள்ளிட்ட பொருட்கள் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நட்சத்திர விடுதியில் உள்ள 2,707 மற்றும் 2,709 ஆகிய இரண்டு அறைகள் முன்பதிவு செய்து இருந்தனர். அவரது மகன்கள் உடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு அறையில் மட்டும் ஓபிஎஸ் தங்குவதாக முடிவு செய்து மற்றொரு அறையின் முன்பதிவை ரத்து செய்துள்ளனர்.

ஓரிரு நாட்கள் ஓட்டலில் ஓய்வு எடுப்பதற்கு முடிவு செய்துள்ள நிலையில் அவரை பார்ப்பதற்கு தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:”திராவிடன்டா” - இந்து முன்னணி கூட்டத்தில் குரல் கொடுத்தவரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details