தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம் - ஜெயலலிதா மரணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

OPS Statement about Jayalalitha Treatment in Arumugasamy Commission
OPS Statement about Jayalalitha Treatment in Arumugasamy Commission

By

Published : Mar 21, 2022, 3:53 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

விசாரணையின் போது, ஆணையம் அவரிடம் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காதது ஏன் என கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, 'அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்ஜிஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் கூறினேன். அப்போலா மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் கூறினார்.

ராம்மோகன் ராவ் - ஓபிஎஸ்

மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன். ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் விஜயகுமார் ரெட்டி என்னிடம் கூறினார்" என வாக்குமூலம் அளித்தார்.

ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ், வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சர் அவையைக் கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாகப் பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது.

அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்துப் போட்டிருப்பேன். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்" என்றார்.

முன்னதாக, காலையில் நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details