தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் ஆசி பெறுவோம்’ - ஓபிஎஸ் - அதிமுக தலைமை

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 4:34 PM IST

சென்னை: அசோக் நகரில் உள்ள அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் இன்று (செப்.28) ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.

அதிமுக தொடங்கப்பட்ட நோக்கம் குறித்தும், கட்சியின் கொள்கைகள் குறித்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுவது தனித்துவமாக உள்ளது. அதனை மக்கள் விரும்பி ரசித்து கொண்டு இருக்கின்றனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள். ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எம்ஜிஆருடன் இருந்தவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய ஆசியை பெறுவோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஒற்றுமை எண்ணத்தோடு இருந்தால் நாடு அமைதி பூமியாக திகழும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details