சென்னை:அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பசுமைவழிச்சாலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றைத் தலைமை பிரச்னை வருதுன்னு.
தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது. இந்த இயக்கத்தில் நான் இருப்பதே தொண்டர்களை காப்பாற்றுவதற்காகத்தான்.அதிமுக, தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது. ஒற்றைத் தலைமை குறித்து பேசியவர்களை கண்டிக்க வேண்டும். கூட்டத்தில் நடந்ததை வெளியே வந்து பேசியது ஏன்?.