தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2022, 11:02 PM IST

ETV Bharat / city

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு - வழக்கறிஞர் திருமாறன்

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளார் என்று வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

சென்னைபசுமைவழிச் சாலை உள்ள இல்லத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர் திருமாறன் உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாறன் கூறுகையில், "ஜூன் 23ஆம் தேதி சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்குழு மற்றும் இன்று தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம்.

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் சமீபகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து விரிவாக எடுத்துக்கூறியுள்ளோம். தற்போது வரை ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் முறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். பொதுக்குழுவில் தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்ட விதிகள் இல்லை. இருவரது பதவியும் காலாவதியாகிவிட்டது என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது சட்டத்துக்கு புறம்பான ஒன்று. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். அதில் எதையும் மாற்றம் செய்யமுடியாது" என்றார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை தாக்கல் - விரைவில் அவசரச் சட்டம் ?

ABOUT THE AUTHOR

...view details