தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் தினந்தோறும் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Opposition leader Edappadi Palanisamy
Opposition leader Edappadi Palanisamy

By

Published : Jun 24, 2021, 7:46 AM IST

Updated : Jun 24, 2021, 10:07 AM IST

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில், கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் புகார்கள் வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதேபோல இறந்தவர்களின் உடல்களை கொடுக்கும்போது பாதுகாப்பாக கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்த அமைச்சர் மா.சு

இதற்குப் பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், 'ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எந்த இறப்புச் சான்றிதழிலும் இறப்புக்கான காரணம் இருப்பதில்லை. மறைந்த பாடகர் எஸ்.பி.பி, மக்களவை உறுப்பினர் வசந்த குமார் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது கரோனா பாதிப்பு இருந்ததும், பின்னர் தொற்று அறிகுறிகள் இல்லை எனவும் வந்தது.

மக்கள் தவறான புரிதலில் உள்ளார்கள். கரோனாவால் இறந்தால் அரசு நிதியுதவி அளிக்கும் என தவறானப் புரிதலில் உள்ளார்கள். அவ்வாறு எந்த நிதியுதவியும் அளிக்கும் திட்டமும் மத்திய, மாநில அரசிடம் இல்லை' எனத் தெரிவித்தார்.

’அர்னாப் கோஸ்வாமி, BARC தலைமை அலுவலர் இடையே பலமுறை ரகசியத் தகவல்கள் பரிமாற்றம்’ - மும்பை போலீஸ்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மேலும் தற்போது கரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால், தமிழ்நாட்டில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அவை முன்னவரின் பதில்

அதற்குப் பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், 'கரோனா ஆரம்ப கட்டத்தில் சட்டபேரவை நடக்கும் போது, முகக்கவசம், கிருமி நாசினி வழங்க நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், உங்களுக்கு எதுவும் ஆகாது உங்களை நாங்கள் காப்பாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், நாங்கள் தான் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோம். ஜெ. அன்பழகனை காப்பாற்றாமல் அவர்கள் விட்டுவிட்டனர்’ என வேதனை தெரிவித்தார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பதிலுரை

தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, 'கடந்த அதிமுக ஆட்சியில், கரோனா தொற்றைக் குறைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்லும்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல், நாங்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்' என்று கூறினார்.

Last Updated : Jun 24, 2021, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details