தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொல்லிமலை ரகசியம் - துரைமுருகன் வேண்டுகோள்! - கொல்லிமலை ரகசியம்

சென்னை: கொல்லிமலை ரகசியத்தை அறிய மக்கள் அதிகளவில் செல்வதால், அங்கு தங்கும் விடுதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

assembly
assembly

By

Published : Mar 12, 2020, 1:37 PM IST

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “கொல்லிமலை மருத்துவம் சார்ந்த மூலிகைகளையும், ஆன்மீகம் சார்ந்த சித்தர்கள் அதிகமாக இருக்கும் இடமாகவும் பல ரகசியங்கள் அடங்கியதாக இருக்கிறது.

இந்த ரகசியங்களை அறிந்துகொள்வதற்கு மக்கள் அதிகளவில் கொல்லிமலைக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்கு ஒரே ஒரு தனியார் தங்கும் விடுதி மட்டுமே உள்ளது. எனவே, மக்களின் வசதிக்காக கொல்லிமலையில் அரசு சார்பில் தங்கும் விடுதி கட்டித்தர வேண்டும்” என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சரோஜா, எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் இந்தக் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசனை செய்யப்படும் என்றார்.

இதையும் படிங்க: மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம் - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details