சென்னை தலைமைச் செயலகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான, சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது.
சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். சட்டக்கல்லூரியில் சேர 11,597 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ”ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும், அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், நீட் தேர்வு சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்கப்பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நீட் மசோதாவிற்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை ” எனவும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க:மின் கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்