கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவினை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு பாதிப்பில்லை. உருமாறிய கரோனா வைரசைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வருவதற்கு, 96 மணி நேரம் முன்னர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகடிவ் இருக்க வேண்டும். அவ்வாறு வந்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.