தமிழ்நாட்டில் கரோனாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இலக்காகி வருகின்றனர். மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் அதன் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பலரும் அச்சத்துடனே தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகளும் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவைச் சேர்ந்த பல நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இத்தொற்றால் நாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோகனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 13, 323 பேருக்கு கரோனா பரிசோதனை