தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்துள்ள நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாக விஜய பாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6ஆக இருந்தநிலையில் தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.