சென்னை:இந்தியாவில் ஒமைக்ரான் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. அதில் 17 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில அரசு மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் நாட்டு மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடஉள்ளனர்.
இதையும் படிங்க:செவிலியர் கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கரோனா