தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Omicron Infection in Tamilnadu: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 34

Omicron Infection in Tamilnadu: தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று
ஒமைக்ரான் தொற்று

By

Published : Dec 27, 2021, 9:39 AM IST

சென்னை: Omicron Infection in Tamilnadu: பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் நேற்று டிசம்பர் 26 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில்," தமிழ்நாட்டில் மேலும், புதிதாக ஒரு லட்சத்து 58 நபர்களுக்கு ஆர்டிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 602 பேருக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும், கென்யாவிலிருந்து வந்த ஒருவருக்கும்,கானடாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 610 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று

ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வந்த 12213 நபர்களுக்கும், பாதிப்புக் குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வந்த 3,169 நபர்கள் என 19 ஆயிரத்து 382 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் அதிகம் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்த 84 நபர்களுக்கும், பாதிப்பு குறைவான நாடுகளிலிருந்து வந்த 74 நபர்களுக்கும் என 158 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

வெளி நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த 31 நபர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று நபர்களுக்கும் ஆக 34 நபர்களுக்கு இதுவரை ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 86 நபர்களுக்கு எஸ்ஜுன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று

இவர்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கான மரபணு மாற்றம் அடைந்த எஸ்ஜுன் டிராப் 86 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 31 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பிலிருந்த மூன்று நபர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 நபர்கள் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்தனர். இவர்களில் 12 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 59 லட்சத்து 88 ஆயிரத்து 156 ஆயிரம் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 37 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு நபர்களும் சென்னையில் இருபத்தி நான்கு நபர்களும் மதுரையில் நான்கு நபர்களும் சேலத்தில் ஒருவரும், திருவண்ணாமலையில் இரண்டு நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நபர் கேரளாவிலிருந்து வந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 6 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 679 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 673 என உயர்ந்துள்ளது.

இறப்பு விகிதம்

மேலும், தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் 10 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.


இதையும் படிங்க: எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்ட மேற்படிப்பு 28 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!

ABOUT THE AUTHOR

...view details