சென்னை: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.