சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டும், அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று(பிப்.11) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அலுவலர்கள் முன்புபோலல்லாமல், தற்போது கடமையை செய்துவருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவருவதாக தெரிவிக்கப்பட்டது.