சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சிகளில் அலுவலர்களை நியமித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகச் சென்னை மாநகராட்சியிலிருந்து புதிதாக உதயமான தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் புயல், வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நோக்கில் அலுவலர்களைக் குழுக்களாகப் பிரித்துப் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தாம்பரம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அலுவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் வெள்ளம் சூழும் பகுதிகளைக் கண்டறிந்திடவும், அடிப்படை வசதிகளுடன் கூடிய வெள்ள நிவாரண முகாம்களை அமைத்திடவும், பொதுமக்கள் தங்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தேவையான உணவு வழங்கிடவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தினசரி பதிவு செய்து அறிக்கையாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதிகள்
- பெருங்களத்தூர் (ஆனந்த ஜோதி - நகராட்சி பொறியாளர்)
- பீர்க்கன்காரணை (மொய்தின் - நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்)
பல்லாவரம் பகுதிகள்
- சிட்லபாக்கம் (பென்சி ஞானலதா, அறிவு செல்வம்)