தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு சலுகை!

சென்னை: கரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, சொத்துவரி நிலுவைக்கான ஆண்டு வட்டியை குறைத்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ias
ias

By

Published : Nov 7, 2020, 8:01 AM IST

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்தின் உரிமையாளர்கள் அந்தந்த அரையாண்டு துவங்கிய முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரியினை செலுத்த வேண்டும்.

இச்சட்டத்தில் தமிழக அரசு கடந்த 2018இல் மேற்கொண்ட திருத்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5% என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 5,000 ரூபாய்க்குள் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்தத் தவறியவர்களிடமிருந்து, செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு 2% தனிவட்டி என சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், கரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, சொத்துவரி நிலுவைத் தொகைகளுக்கு ஆண்டிற்கு 2% தனிவட்டி என்பதற்கு பதிலாக, 0.5% தனிவட்டி எனக் குறைத்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, நிலுவைத் தொகைகளை 31.03.2021க்குள் செலுத்தலாம்.

மேலும், கடந்த 01.10.2019 முதலான நிலுவைக்கும் முன் தேதியிட்டு இச்சலுகை பொருந்தும். அதோடு ஏற்கனவே நிலுவையை 2% கணக்கில் கட்டியவர்களுக்கு, 0.5% தனிவட்டி கணக்கிடப்பட்டு நேர் செய்து மிகைத்தொகை அடுத்த அரையாண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும். அடுத்து வரும் நிதி ஆண்டின் (2021-22) முதல் அரையாண்டு முதல், அதாவது 01.04.2021 முதல், குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத சொத்துவரி நிலுவைகளுக்கு, ஆண்டிற்கு 2% தனி வட்டி சேர்த்து வசூல் செய்யப்படும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு சுகாதாரத்துறை சாதனை!

ABOUT THE AUTHOR

...view details