சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பசுமை வழிச்சாலையிலுள்ள அவர்களது இல்லங்களில் அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' தொடர்பாக இன்று (ஜூன்20) 7-ஆவது நாளாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கட்சி ரீதியாக, சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன், பெரம்பலூர் மா.செயலாளர் ராமந்திரன், அரியலூர் மா.செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.