தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
#HBDPERIYAR : "உங்கள் சொற்களே எங்கள் ஆயுதம்" - ஸ்டாலின் ட்விட்டர் பதிவு - #HBDPERIYAR
சென்னை: தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்தார்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின்
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மொழியுரிமை, இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டு போராடுகிறோம் அய்யா! பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்! வாழ்க பெரியார்! #HBDPERIYAR " என்று பதிவிட்டுள்ளார்.