சென்னை:தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர் தலைவராகவும், துறையின் முதன்மைச் செயலாளர், துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநர், உறுப்பினர் - செயலராகவும், பல்வேறு அரசு துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அலுவல் சார் உறுப்பினர்களாகவும், திருநங்கைகளை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவர்.
அந்த வகையில், திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், புதிதாக 12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 13 நபர்களை அக்டோபர் 10ஆம் தேதி தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.