தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனையடுத்து மீதம் இருக்கும் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்குமான தேர்தல் மே 19ஆம் தேதி நடக்க இருக்கிறது.
நான்கு தொகுதி இடைத்தேர்தல்; இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம் - அதிமுக
சென்னை: அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
nomination
இதனையடுத்து தனது வேட்பாளர்களை திமுக தலைமை சமீபத்தில் அறிவித்தது. மேலும், அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இன்று அறிவிக்க இருக்கின்றன.
இந்நிலையில், நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 29ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் எனவும் மனுக்களைத் திரும்பப் பெற மே 2ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.