தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய தேசிய கல்விக்கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழுக்கு இடமில்லை! - சென்னை

புதிய தேசிய கல்விக்கொள்கை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

NO TAMIL TRANSLATION IN NEW NATIONAL EDUCATION POLICY, புதிய தேசிய கல்வி கொள்கை
புதிய தேசிய கல்வி கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழுக்கு இடமில்லை

By

Published : Apr 24, 2021, 7:04 PM IST

சென்னை: கஸ்தூரி ரங்கன் கல்விக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு தாக்கல்செய்த கல்விக்கொள்கையை அடிப்படையாக வைத்து, 2020இல் புதிய கல்விக்கொள்கை தேசிய அளவில் உருவாக்கப்பட்து.

இதற்கு மத்திய அமைச்சரவை, 2020ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்தக் கல்விக்கொள்கையானது தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுவருகிறது.

அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் இருந்துவரும் சூழலில் தற்போது அதன் மொழிபெயர்ப்பில்கூட தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் காலாவதியான ரெம்டெசிவிர்?

ABOUT THE AUTHOR

...view details