சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, "பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினரை திமுகவினர் பூட்டுப் போட்டு வைத்தபோது, அமைச்சர் முன்னிலையில் அவரது உதவியாளர் அந்த பூட்டை உடைத்தது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
பணப்பட்டுவாடா வீடியோ இருக்கு, ஆனா புகார் இல்லையே - தலைமைத் தேர்தல் அலுவலர் - தலைமைத் தேர்தல் அலுவலர்
சென்னை: வேலூரில் பணப்பட்டுவாடா தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திகள் வந்தாலும், அதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "வேலூர் மக்களவைத் தொகுதியில் 15 விவிபேட் இயந்திரங்களும் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்குப்பதிவின்போது மாற்றப்பட்டன. பணப்பட்டுவாடா தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திகள் வந்தன, ஆனால் அது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை" என்றார்.
வாக்காளர் பட்டியல் குறித்து பேசுகையில், "வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர் அதன் பின்னர் அக்டோபர் 15ஆம் தேதிவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தவித்தார்.