தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கூடாது... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 16, 2022, 11:20 AM IST

Updated : Aug 16, 2022, 11:43 AM IST

சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொடக்க நிலை வகுப்புகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மூலம் குழந்தைகளை அதிக எடை கொண்ட புத்தகப் பைகள் சுமப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் மீண்டும் நீதிமன்றம் 1 மற்றும் 2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் தருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றி பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து, ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Aug 16, 2022, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details