சென்னை:தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வசூலிக்க கூடாது!
இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித்தத்தில், 'மாணவர்களிடம் இருந்து பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணம் 50 ரூபாய் தவிர வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்ககூடாது. பள்ளி சார்பில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போதும், எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.