தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராம ஊராட்சியில் சாதிய பாகுபாடு கூடாது - தலைமைச் செயலாளர் கடிதம் - no caste discrimination in the Gram Sabha meeting

கிராம ஊராட்சியில் சாதிய பாகுபாடு கூடாது தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 23, 2022, 7:54 AM IST

சென்னை: சாதிய பாகுபாடுகள் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களை கண்ணியத்தோடு நடத்தும் விதமாக, அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்‌ எழுதியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தேன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், பல‌ மாவட்டங்களில் சாதிய பாகுபாடு காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பட்டியலிடப்பட்டுள்ளது.‌ இது தொடர்பாக தலைவர் பெயர் பலகை இல்லாத ஊராட்சிகளில், பெயர் பலகை வைப்பதை உறுதி செய்து அதன் விவரத்தை புகைப்படங்களுடன் அரசுக்கு அனுப்பவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவரை, தலைவர் நாற்காலியில் அமர வைப்பதையும், தலைவர்கள் மற்றும் பிரநிதிகள் அவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து அலுவலகப் பணிகளை செய்வதை உறுதி செய்ய வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் முக்கிய தலைவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித்திட்டம்

ABOUT THE AUTHOR

...view details