சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் அதி கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.