தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'வாட்ச்மேன் தங்கதுரையின் தங்க மனசு... முதலமைச்சரின் அன்புப் பரிசு...'

தனது ஒரு மாத சம்பளத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இரவுக் காவலர் தங்க துரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

'தங்கதுரையின் தங்க மனசுக்கு முதலமைச்சரின் அன்புப் பரிசு'
'தங்கதுரையின் தங்க மனசுக்கு முதலமைச்சரின் அன்புப் பரிசு'

By

Published : May 14, 2021, 8:19 PM IST

Updated : May 14, 2021, 11:22 PM IST

சென்னை: கரோனா நோய்த் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் கோரிக்கைக்கு இணங்க பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.

'வாட்ச்மேன் தங்கதுரையின் தங்க மனசு... முதலமைச்சரின் அன்புப் பரிசு...'

அண்மையில் மதுரை சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு அளித்தார். இதையடுத்து சிறுவனுக்கு முதலமைச்சர் சைக்கிள் வாங்கிக் கொடுத்து மற்றவர்களும் நிதி வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சென்னை - சாலிகிராமத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இரவுக் காவலர் ஒருவர் தனது ஒரு மாதச் சம்பளம் 10 ஆயிரத்து 101 ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். அவரது சேவையைப் பாராட்டி, அவரை நேரில் வரவழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அறிக்கை

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை, சாலிகிராமத்தில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தங்க துரை (வயது 59), தனது ஒரு மாத சம்பளத்தை, பொதுப் போக்குவரத்து தற்போது இல்லாத சூழ்நிலையில், மிதிவண்டியில் வந்து, முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்க முயற்சித்தார்.

இரவு காவலர் தங்கதுரை

ஆனால், முதலமைச்சரின் அலுவல் பணி காரணமாக, அவரை நேரில் சந்தித்து வழங்க இயலாததால், தனது ஒரு மாத ஊதியமான 10 ஆயிரத்து 101 ரூபாயை அரசுக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதை அறிந்த முதலமைச்சர், தங்கதுரையை இன்று நேரில் அழைத்து, நிதி வழங்கியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 14, 2021, 11:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details