தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வருமானமின்றியும், உணவின்றியும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருள்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது. சிரமத்திற்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு நேரடியாக உணவுப் பொருள்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் போது சமூக விலகல் கடைபிடிக்கப்படாமல் இருப்பதால் கரோனா வைரஸ் மேலும் பரவ வாய்ப்பு உள்ளளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மூலமாக உரிய பரிசோதனைக்கு பிறகு இதனை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.