தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய செய்திகள்

மாதத்தின் கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதியின் முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை காணலாம்

NEWS TODAY on july 31
NEWS TODAY on july 31

By

Published : Jul 31, 2021, 6:44 AM IST

ஹைதராபாத் : இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

  • பன்னிரெண்டாம் வகுப்பு ஹால்டிக்கெட்

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12627157_school.png
  • வணிக வளாகங்கள் செயல்பட தடை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

delete this text
  • விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் நாள் கூட்டமானது காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது.

delete this text
  • இன்று தண்ணீர் திறப்பு

காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

delete this text
  • சீன ராணுவத்துடன் இன்று 12ஆவது சுற்று பேச்சு

இந்திய - சீன எல்லையில் படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான 12ஆவது சுற்று பேச்சு இன்று நடக்கிறது.

delete this text

ABOUT THE AUTHOR

...view details