தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ETVBharatNewsToday

ஏப்ரல் 24ஆம் தேதியின் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY ON APRIL 24
NEWS TODAY ON APRIL 24

By

Published : Apr 24, 2021, 6:32 AM IST

Updated : Apr 25, 2021, 5:39 AM IST

சென்னை:இன்றைய நிகழ்வுகள் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

  • மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மடீட்சியா நடத்தும் தடுப்பூசி முகாம்
    கரோனா தடுப்பூசி

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மடீட்சியா சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று(ஏப்.24) முதல் நடைபெற உள்ளது.

  • ஆந்திராவில் இன்று முதல் ஊரடங்கு
    ஊரடங்கு

ஆந்திர மாநிலத்தில் இன்று(ஏப்.24) முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று உலக கால்நடை மருத்துவ தினம்
    உலக கால்நடை மருத்துவ தினம்

விலங்குகள் மற்றும் பறவைகளின் நலம் காக்கும் கால்நடை மருத்துவப் பணியாளர்களின் உன்னத சேவையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி சனிக் கிழமை உலக கால்நடை மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.

  • முழு ஊரடங்கால் கொடைக்கானல், கீழச்சிவல்பட்டியில் இன்று வாரச்சந்தை
    சந்தை

கொடைக்கானலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு நாள் முன்னதாகவே சந்தையை நடத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ்
    ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் டி20, 2021 கிரிக்கெட் 18 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று(ஏப்.24) மோதுகிறது.

  • மீனாட்சி திருக்கல்யாணம் இன்று!
    மீனாட்சி திருக்கல்யாணம்

பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்பு இல்லாமல் இரண்டாவது முறையாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று(ஏப்.24) நடைபெறுகிறது.

Last Updated : Apr 25, 2021, 5:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details