தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - news today

இன்றைய நிகழ்வுகள் செய்திகளின் தொகுப்பையும் காணலாம்.

news today on april 23 2021
news today on april 23 2021

By

Published : Apr 23, 2021, 6:09 AM IST

சென்னை:இன்றைய நிகழ்வுகள் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

  • முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கரோனா பரவல் அதிகமுள்ள மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
  • புதுச்சேரியில் இன்று முதல் வார இறுதி நாட்களில் ஊரடங்கு

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல இன்று முதல் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
  • தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தென் தமிழ்நாடு, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை
  • அழகர்கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடக்கம்

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது. அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி தனி நபர் இடைவெளியை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா
  • கரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்

பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு
  • மும்பை இந்தியன்ஸ் உடன் மோதும் பஞ்சாப் கிங்ஸ்

ஐபில் டி20, 2021 கிரிக்கெட் 17 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details