தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு!

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று வழிப்பட்டனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்கள் பொதுமக்கள் வழிப்பாடு!
புத்தாண்டுக் கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்கள் பொதுமக்கள் வழிப்பாடு!

By

Published : Jan 1, 2021, 11:10 AM IST

கரோனா பரவலுக்கு இடையே புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டாலும், வழிபாட்டு தளங்களில் பொதுமக்களுக்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை வடபழனி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் காலை 5 மணி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய தொடங்கினர்.

கோயில், தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு!

கரோனா காலம் என்பதால் கோயில்களில் அர்ச்சனை செய்ய முடியாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் கோயில்களுக்கு உள்ளே முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்று காவல் துறை தெரிவித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போன்று சாந்தோம் தேவாலயத்திலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதையும் படிங்க...2020 - தமிழ்நாடு ஒரு பார்வை

ABOUT THE AUTHOR

...view details