தேசிய வாக்காளர் நாள் விழா, கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலர் சூர்பீர் சிங், கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் நாள் - இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கல்! - தேசிய வாக்காளர் நாள்
புதுச்சேரி: தேசிய வாக்காளர் நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பாட் இயந்திரம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. மேலும், இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும், சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு விருதுகளும், தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நேர்மையான தேர்தல் - மாணவர்களுக்கு ஆளுநர் அழைப்பு!