தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு.. வேறு எதற்கெல்லாம் அனுமதி? - Bus service in 23 districts

தமிழ்நாட்டில் ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகை 1, 2, 3 என பிரிக்கப்பட்டு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு
பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு

By

Published : Jun 28, 2021, 7:59 AM IST

Updated : Jun 28, 2021, 10:09 AM IST

சென்னை: மாநிலம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகை 1, 2, 3 என பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

23 மாவட்டங்களில் பேருந்து சேவை

ஏற்கனவே வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வகை 2இல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை

இந்த அனுமதியின் அடிப்படையில் அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் பேருந்து சேவை தொடங்குகிறது.

பயணிகள் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் 50 விழுக்காடு இருக்கைககளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் குறைந்த 27 மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

துணி, நகைக் கடைகளுக்கு அனுமதி

வகை 2இல் உள்ள 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகை கடைகளை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி கடைகள் செயல்படலாம்.

துணிக் கடைகள் திறப்பு

தொற்று அதிகமுள்ள வகை 1இல் உள்ள 11 மாவட்டங்களில் ஹார்டுவேர் கடைகள், கைப்பேசி, எலெக்ரிக், மென்பொருள்கள் விற்பனை கடைகள், காலணி கடைகள், பாத்திரக் கடைகள், ஜெராக்ஸ், பேன்ஸி, புத்தக கடைகள், எலெக்ட்ரிக், மெக்கானிக் ஷாப்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த கடைகள் செயல்படலாம்.

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது.பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன. விபூதி, குங்குமத்தை பொட்டலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள மசூதிகளில் இன்று காலை தொழுகை நடந்தது.

இதையும் படிங்க:மனித - விலங்கு மோதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

Last Updated : Jun 28, 2021, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details