சென்னை: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு பணிகளை கவனித்துவந்த ஷில்பா பிரபாகர் ஐஏஎஸ், இனி முழுநேர சிறப்பு அலுவலராகவும், முதலமைச்சர் அலுவலக சிறப்பு செயலாக்க அலுவலராகவும் செயல்படுவார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு - Jeyaselan IAS
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஷில்பா பிரபாகருக்கு முதலமைச்சர் அலுவலக சிறப்பு செயலாக்க அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அலுவலர்களுக்கு புதிய பொறுப்பு
தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பொறுப்புகளை கவனித்து வந்த ஜெயசீலன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இயக்குநராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ’இன்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ - சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல்