கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் இடையேயான ஓவியப்போட்டிக்கு இந்திய அஞ்சல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களின் ஓவியங்களுடன் கூடிய சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதன்மை அஞ்சல் தலைவர் குமார், " இந்தியா முழுவதும் இந்திய அஞ்சல் துறையால் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் ஓவியப் போட்டியில் 324 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.