தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராயபுரத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய திட்டம்! - சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனா தொற்று அதிகமுள்ள ராயபுரம் பகுதியில் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

meet
meet

By

Published : May 15, 2020, 1:27 PM IST

Updated : May 15, 2020, 2:37 PM IST

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், “ 75 விழுக்காடு பாதிப்பு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்துதான் பரவுகிறது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

மேலும், தொற்று அதிகமுள்ள ராயபுரம் பகுதியில், பாதிப்பை கட்டுப்படுத்த புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளோம். அதன்படி,

ராயபுரம் பகுதிக்கு புதிய திட்டம்:

  • குறுகிய தெருக்களில் வசிக்கும் மக்களை சமுதாயக் கூடங்களில் தங்க வைக்க திட்டம்.
  • அவர்களுக்கு வாழைப்பழம், முட்டை உள்ளிட்டவை அடங்கிய சத்துணவு கொடுக்கப்படும்.
  • அவர்களின் வீடுகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்தப்படும்.
  • அந்தப் பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அடுத்தக்கட்டமாக கரோனா தொற்று அதிகமுள்ள கோடம்பாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்படும். தற்போது திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

குடிசைப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் பணி, காய்ச்சல் முகாம் நடத்தப்படும். 120க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் 80 விழுக்காடு பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மக்களை பரிசோதித்துள்ளோம் “ எனக் கூறினார்.

மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மக்களை பரிசோதித்துள்ளோம்

இதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், " மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 13 ரயில்கள் மூலம் 16,000 பேர் இதுவரை சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறையை மாற்றியுள்ளோம். அதன்படி, ஒரு தெருவில் 1 அல்லது 2 நபர்களுக்கு பாதிப்பு இருந்தால் வீட்டுக்கு மட்டும் தடுப்பு அமைக்கப்படும். 5க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து கட்டுப்படுத்தப்படும் " என்றார்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறையை மாற்றியுள்ளோம்

இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - ஜெயக்குமார் அறிக்கை

Last Updated : May 15, 2020, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details