தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுவை மாநில மநீம நிர்வாகிகள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு! - மக்கள் நீதி மையம்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன், அதன் தலைவர் கமல் ஹாசன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

kamal
kamal

By

Published : Aug 3, 2020, 7:29 PM IST

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அக்கட்சிக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தை புதுச்சேரி மாநிலத்தில் விரிவுபடுத்தும் வகையில், புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(ஆகஸ்ட் 3) காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், புதுவை மாநிலத் தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பிறகு 10 மாநிலச் செயலாளர்கள் மற்றும் தொகுதி நிர்வாகிகளை நியமித்து அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பாரதிராஜா!

ABOUT THE AUTHOR

...view details