ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோயில்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வயதானவர்கள், சிறுவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும், முகக்கவசம் அணியாமலோ தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலோ இருக்கக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு வருவோர், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என, திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் திடீர் ஆய்வுசெய்யப்பட்டது.
அப்போது, முகக்கவசம் அணியாமல் கோயிலுக்கு வந்த புதுமணத் தம்பதி, பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும், கோயில் வளாகத்திலேயே மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்தல், இதர வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.
முகக்கவசம் அணியாத புதுமணத்தம்பதி - அபராதம் விதிப்பு இதையும் படிங்க: உணவுப் பொருட்களில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து பாதுக்காத்துக்கொள்வது எப்படி? - மாநகராட்சி விளக்கம்!