இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்து 15 நாட்கள் முடிவடைந்துள்ளன. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையங்களை அரசு இன்னும் தொடங்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2018ஆம் ஆண்டு 1,300 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அவர்கள் அதிக மதிப்பெண்களை பெறவில்லை.
நீட் பயிற்சி மையம் வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் - நீட் தேர்வு
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தனியார் பயிற்சி மையங்களை பெரும்பாலும் ஆங்கில வழியில்தான் வழங்குகின்றனர். தமிழ்நாடு அரசு தனியார் பயிற்சி மையத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வழங்கிவருகிறது. ஆனால் அதற்கான நிதியை ஸ்பீடு நிறுவனத்திற்கு இன்னும் வழங்கவில்லை. சுமார் 15 லட்சம் வரை செலவு செய்துள்ள அந்த நிறுவனம் இந்த ஆண்டு பணம் அளித்தால் மட்டுமே பயிற்சி வழங்கப்படும் என கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தது. இந்தாண்டு அதுபோன்ற பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்கிட வேண்டும்” என்றார்.