தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள்

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நீட்

By

Published : Mar 17, 2019, 12:28 PM IST

அரசு,அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளுர், கிருஷ்ணகிரி, கோயம்புத்துார், பொள்ளாச்சி, திருச்செங்கோடு, திருச்சி, தேனி, நாகர்கோவில் ஆகிய எட்டு மையங்களில் தமிழ் வழியிலும்- சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி, துாத்துக்குடி என்.இ.இ.பொறியியல் கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் ஆங்கில வழியிலும் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை 11ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்த கல்வியாண்டில் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில்தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பில் சுமார் நான்காயிரம் மாணவர்கள் ஒரு மாதம் தங்கி படிக்கும் வகையில் கழிப்பிட வசதிகள், குளியலறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர், உணவு வசதிகள் செய்துத் தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பயிற்சி மையங்களில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும், மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தேவையான முதலுதவி வழங்குவதற்கு ஏதுவாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறினார்.


ABOUT THE AUTHOR

...view details