தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மார்ச் 25ல் நீட் பயிற்சி துவக்கம் - Training begins on mar 25

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு வருகிற 25ம் தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது.

மாணவர்கள்

By

Published : Mar 15, 2019, 1:56 PM IST

தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்விற்கென 413 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் ஏற்கனவே 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

பொது தேர்வு காரணமாக இந்த பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பயிற்சிகள் மார்ச் 25-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மையங்களில் பயிற்சி பெறுவதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் நான்காயிரம் பேருக்கு தங்கும் இடம் வசதி அளித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details