சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5 ஆம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 16 ஆம் தேதி தாவரவியல், உயிரியல், வரலாறு ஆகிய முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
பொதுத் தேர்வினை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திற்குத் தேர்வு கண்காணிப்பு அலுவலராக தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 9 ஆம் தேதி நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த போது, பள்ளியின் முதல்வர் வளாகத்திற்குள் உள்ளே இருப்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல் 16 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்கு சென்றபோது ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதைப் பார்த்துள்ளார்.