தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தன்னை விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை, ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், தன்னை விடுவிக்கக்கோரியும் இவ்வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

nalini murugan
nalini murugan

By

Published : Nov 12, 2021, 4:01 PM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.

சட்டவிரோதமாக சிறை என புதிய மனு

இந்தப் பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுவியுங்கள்

தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி ஆளுநர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரது வழக்கில், பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும், எனவே அமைச்சரவையின் முடிவை ஆளுநர் செயல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும்; மேலும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

விசாரணைக்கு வந்த வழக்கு

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Kodanad Case - ஈபிஎஸ்,சசிகலாவை விசாரிக்கக்கோரிய மனு:பதிலளிக்க அவகாசம் கேட்ட காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details