முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், முருகன் நளினி இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் நளினியை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.