தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்த தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. காலியாக உள்ள மற்ற நான்கு தொகுதிகளான அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகியவற்றிற்கு மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து திமுக, அமமுக ஆகியவை தங்களது இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தன.
இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு! - அரவக்குறிச்சி
சென்னை: அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நான்கு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. அதில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் இரண்டில் பெண் வேட்பாளர்களும், மற்ற இரண்டில் ஆண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செல்வம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் அகல்யா, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் வெ.விஜயராகவன் என்பவரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 ஆம் தேதி கடைசி நாளாகும்.