தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ. 6 கோடி மதிப்பிலான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சொத்துகள் மீட்பு - சென்னை அப்டேட்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை தகவல்
இந்து சமய அறநிலைத்துறை தகவல்

By

Published : Dec 17, 2021, 11:11 AM IST

Updated : Dec 17, 2021, 11:26 AM IST

சென்னை:அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 3,300 சதுரடி பரப்பளவுள்ள கட்டிடம் மற்றும் காலி மனை, ராமாதேவி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டன

இக்கட்டிடத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகை மற்றும் நிலுவைத் தொகையை கட்டத் தவறியதால் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி, திருக்கோயில் வசம் சொத்துக்கள் மீட்கப்பட்டன.அதன் மதிப்பு ரூ.6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்

Last Updated : Dec 17, 2021, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details